இயர் போனில் பாடல் கேட்டுக்கொண்டிருந்த கல்லூரி மாணவர்... நொடிப்பொழுதில் உயிரிழந்த சோகம்

Report
405Shares

காதில் இயர் போன் வைத்துக்கொண்டு பாட்டு கேட்டபடி கல்லூரி மாணவர் ரயில்வே பாதையினை கடக்க முயன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இன்றைய காலத்தில் செல்போன் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை எண்ணிடலங்காமல் சென்று கொண்டிருக்கும் வேளையில், காதில் இயர் போனை வைத்துக்கொண்டு பாடல் கேட்டுக்கொண்டும், போன் பேசிக்கொண்டும் வாகனத்தில் பயணிப்பவர்கள் அதிகரித்துள்ளனர்.

இவ்வாறு திருவள்ளூரைச் சேர்ந்த மிதுன் என்ற இளைஞர் கல்லூரி முதலாமாண்டு படித்து வரும் நிலையில், எப்பொதும் போல் காதில் இயர்போனை வைத்து பாடல் கேட்டுக்கொண்டு ரயில் பாதையினைக் கடந்துள்ளார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக சென்னையிலிருந்து கோவை சென்ற சதாப்தி விரைவு ரயில் மோதி பரிதாபமாக பலியாகியுள்ளார்.

குறித்த மாணவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கும் தருணத்தில் பொலிசார் விசாரணையும் நடத்தி வருகின்றனர். குறித்த இளைஞர் காதில் இயர்போனில் பாடல்கேட்டக்கொண்டு சென்றதே இந்த விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.

loading...