தன்னைக் கடித்த பாம்பை கடித்து துப்பிய நபர்... பின்பு நடந்தது என்ன? அதிர்ந்த மருத்துவர்கள்

Report
1364Shares

உத்திரபிரதேசத்தில் தன்னைக் கடித்த பாம்பை விவசாயி ஒருவர் கடித்து துப்பிய சம்பவம் மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவில் உத்திரபிரதேசத்தின் ஹார்டா என்ற பகுதியினைச் சேர்ந்த சோனலால். இவர் மயக்கநிலையில் கிடந்ததால் 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் கொடுக்கப்பட்டு அழைத்துச்செல்லப்பட்டார்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் எதுவும் கடித்ததற்கான அடையாளம் இல்லாததால் குழம்பிய நிலையில் காணப்பட்டபோது சோனலால் மயக்கம் தெளிந்துள்ளார்.

அவரிடம் மருத்துவர்கள் விசாரித்தபோது, தன்னை பாம்பு ஒன்று கடித்ததாகவும், அதனால் அதனை பழிவாங்க அதன் தலையைக் கடித்து துப்பியதால் பாம்பு உயிரிழந்துவிட்டது... ஆனாலும் விடாமல் மற்றொரு முறை அதன் தலையை எடுத்து கடித்தேன் என்று அதிர்ச்சியளிக்கும் விடயத்தினைக் கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட மருத்துவர்கள் இம்மாதிரியான நபரை இதுவரை அவதானித்ததில்லை எனவும் பாம்பு கடித்தும் இவருக்கு எதுவும் ஆகாமல் இருப்பது ஆச்சரியம் என்று கூறியுள்ளனர்.

43791 total views
loading...