ஓடும் பேருந்தில் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுப்பட்ட நடத்துனர்.. காணொளியாக வெளியிட்டு அதிர்ச்சியளித்த பெண்..!

Report
943Shares

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுப்பட்ட பேருந்து நடத்தினரை பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பெங்களூரில் ஓடும் பேருந்தில் பெண் பயணியிடம் பேருந்தின் நடத்துனர் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார். நடத்துனர் எதார்த்தமாக அமர்கிறார் என நினைத்த அப்பெண் எதுவும் கண்டுக்கொள்ளமல் இருந்துள்ளார்.

சிறிது நேரத்தில், நடத்துனர் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட தொடங்கியுள்ளார். இதை அந்த பெண் தடுக்க முயற்சி செய்தும், அதைக்கண்டுகொள்ளாமல், மேலும், இதை தொடர்ந்து செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில், பொறுமையிழந்த அப்பெண் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, பேருந்தை நிறுத்தக்கூறி சண்டையிட்டுள்ளார்.

இதன் பின்பு, தன் மீது எந்த தவறும் இல்லை என, நடத்துனர் கூற, தன்னிடம் உள்ள வீடியோ ஆதாரத்தை காட்டியுள்ளார் அப்பெண். பின்னர் விவகாரம் பெரியதானத்தை அடுத்து, போக்குவரத்து காவல் துறையினர் அளித்த புகாரில், சம்பந்தப்பட்ட நடத்துனர் மீது, பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அங்கிருந்தவர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

குறித்த காணொளியை இங்கே அழுத்தி காணலாம்....
33150 total views
loading...