பக்கத்து வீட்டில் சீரியல் பார்த்துக்கொண்டிருந்த பெண்... பதறியடித்து ஓடி உயிரிழந்த கோரம்!

Report
404Shares

மதுரையில் பக்கத்து வீட்டில் சீரியல் பார்த்துக் கொண்டிருந்தபோது தனது வீட்டில் தீ பிடித்தது தெரியாமல் திடீரென உள்ளே நுழைந்ததில் பெண் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை காமராஜர்புரம் அண்ணா மேலத்தெருவை சேர்ந்தவர் லட்சுமி(43). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ஐந்து வருடத்திற்கு முன்பு பிரிந்து தனியாக வசித்து வருகின்றார்.

விவாகரத்து வழக்கு நடந்து வருவதால் இவரது இரண்டு ஆண் குழந்தைகளும், கணவரிடம் இருந்து வருகின்றது. லட்சுமி லேமினேசன் கடையில் பணியாற்றி வந்த நிலையில் வீட்டில் ரிவி வசதிகள் இல்லை.

இதனால் வேலை முடிந்து வரும் லட்சுமி பக்கத்துவீட்டில் சீரியல் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் நேற்றும் வழக்கம் போல் அங்கு டிவி பார்த்துக்கொண்டிருந்த தருணத்தில், இவரது வீட்டிலிருந்து புகைவந்ததை அவதானித்த பக்கத்தில் உள்ளவர்கள் லட்சுமியிடம் சென்று கூறியுள்ளனர்.

இதில் பதறியடித்து வந்த லட்சுமி, கதவைத் திறந்து உள்ளே சென்றதும் புகை மூட்டத்தில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளார். பின்பு தீயணைப்பு படையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உள்ளே அவதானித்த போது லட்சுமி உடல் கருகிய நிலையில் பரிதாபமாக இறந்துகிடந்துள்ளார்.

உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பிய நிலையில், இந்த விபத்து குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சினேகா- பிரசன்னா மகளின் பெயர் இதுதானாம்!... அர்த்தம் என்ன தெரியுமா?

12656 total views
loading...