மனைவியின் கூடா நட்பு!... ரகசிய கமெராவில் கணவன் கண்ட அதிர்ச்சி காட்சி

Report
900Shares

தமிழகத்தில் மனைவியின் கூடா நட்பால் கணவன் கொலையாளியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

தூத்துக்குடியின் புங்கவர்நத்தத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 58), மேளம் வாசிக்கும் தொழில் செய்து வரும் சண்முகம் கட்டிட வேலையையும் செய்து வந்துள்ளார்.

இவருடைய இரண்டாவது மனைவி வாசுகி, இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில் வாசுகிக்கும், தாரை தப்பட்டை வாசிக்கும் தொழில் செய்து வந்த ராமமூர்த்தி(வயது 30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இதுபற்றி தெரிந்து சண்முகம் கண்டித்தும் இருவரும் கேட்கவில்லை, ஊர்காரர்களிடம் சொன்ன போதும் ராமமூர்த்திக்கு நல்ல பெயர் இருந்ததால் நம்பாமல் இருந்துள்ளனர்.

எனவே ஆதாரத்துடன் நிரூபிப்பதற்காக மூன்று செல்போன்னை வாங்கிய ராமமூர்த்தி வீட்டின் மூன்று இடங்களில் ரகசியமாக மறைத்து வைத்துள்ளார்.

இதில் இருவரும் சந்திக்கும் காட்சிகளும் படமாகி இருந்தன, இந்நிலையில் சம்பவ தினத்தன்று நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த போது சத்தம் கேட்டுள்ளது.

இதில் சண்முகம் விழித்தெழ, வெளியில் வந்து பார்த்த போது வாசுகி, ராமமூர்த்தியிடம் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரத்தில் அருகில் இருந்த அரிவாளை எடுத்து இருவரையும் வெட்டியதுடன் பொலிசில் சென்று சரணடைந்தார் சண்முகம்.

தான் கொலை செய்ததற்கான காரணத்தையும் வாக்குமூலமாக அளித்துள்ளாராம் சண்முகம்.

அசிங்கமா இல்ல... நடிகர் சரத்குமார் உங்க அப்பாவா என்ன?

28875 total views
loading...