தாயின் அலட்சியம்... துடிதுடித்து மரணித்த 4 வயது குழந்தை! பெற்றோர்களே உஷார்

Report
460Shares

இந்திய மாநிலமான தமிழகத்தில் குளிக்க வைப்பதற்கு வைத்திருந்த சுடுதண்ணீரில் 4 வயது குழந்தை உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

பெரியபாளையம் அருகே உள்ள திருக்கண்டலம் தலையாரி தெருவைச் சேர்ந்த கஜேந்திரன்- குப்பம்மாள். இவர்களது மகள் நித்தியஸ்ரீ(4).

தனது மகளை குளிக்க வைப்பதற்கு சுடுதண்ணீர் போட்டு அதனை குளியலறையில் இருந்த அண்டாவில் ஊற்றியுள்ளார். பின்பு கேஸ் அடுப்பினை அணைப்பதற்கு வந்த தருணத்தில் குழந்தை நித்தியஸ்ரீ அண்டாவில் தவறி விழுந்து அலறியுள்ளாள்.

சத்தம் கேட்டு பதறித் துடித்து வந்த குப்பம்மாள் குழந்தை நித்தியஸ்ரீயை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக இறந்துள்ளார். இதுகுறித்து பெரியபாளையம் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

20306 total views
loading...