திருமணத்தில் நடந்த நிகழ்வு... மறுநாளே மரணம் அடைந்த புதுமாப்பிள்ளை

Report
244Shares

தெலுங்கானாவில் திருமணம் ஆன அடுத்த நாளே மணமகன் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவில் கணேஷ் என்பவருக்கு கடந்த வியாழன் கிழமை திருமணம் நடந்துள்ளது. கோலாகலமாக நடந்த திருமணத்தின் போதே மிகவும் களைப்பாக இருந்த அவர், அடுத்த நாள் வீட்டில் இருந்த போது மயக்கமடைந்து விழுந்துள்ளார்.

உடனடியாக குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற நிலையில், அவரைப் பரிசோதித்த மருததுவர்கள் அவர் மாரடைப்பு வந்து இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதைக் கேட்ட அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்ததோடு, மகனின் இறப்பிற்கான காரணத்தினைக் கூறியுள்ளனர். ஆம் திருமண வரவேற்பின் போது அதிக சத்தத்துடன் கூடிய பாட்டுக் கச்சேரிதான் காரணம் என அவரது பெற்றோர் சொல்லியுள்ளனர். அந்த இரைச்சலைக் கேட்ட பின்னரே அவரின் உடல்நிலை சரியில்லாமல் போனதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

10165 total views
loading...