பங்களா வீட்டில் அக்கா தங்கை அரங்கேற்றிய செயல்... அவிழ்ந்த உண்மையால் ஆடிப்போன பொலிசார்

Report
1295Shares

சென்னையில் தாய், தந்தையை பார்த்துக்கொள்வதற்கு வீட்டில் 2 பெண் வேலைக்காரரரை வைத்த தொழிலதிபர் தற்போது நகை, பணத்தினை இழந்து காணப்படுகின்றார்.

சென்னை, எழும்பூர், சுலைமான் சக்ரியா அவென்யூ, காசா மேஜர் ரோட்டில் வசித்து வருபவர் டாக்டர் கோகுல்தாஸ்(84). பங்களா வீட்டில் மனைவியுடன் வசித்து வரும் இவர்களை கவனித்துக் கொள்வதற்கு தொழிலதிபரான மகன் கல்யாண்குமார் இரண்டு பெண்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.

இந்நிலையில் கல்யாண்குமார் வீட்டில் 6 லட்சம் ரூபாயை பீரோவை வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளார். சில நாட்களுக்கு பின்பு அப்பணத்தினைக் காணவில்லை என்பதால் பெற்றோரிடம் கேட்டுள்ளார். அவர்களுக்கும் தங்களுக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளனர்.

பின்பு நகை வைத்திருக்கும் பீரோவில் பார்த்த போது அங்கு நகையுடன், தங்க கட்டிகளையும் காணாமல் சென்றுள்ளது. பின்பு பொலிசில் புகார் அளித்ததின் பெயரில் பெற்றோர்களிடம் விசாரித்ததில் தாங்கள் பகலில் தூங்கிவிடுகிறோம்... ஆதலால் தங்களுக்கு தெரியாது என்று கூறியுள்ளனர்.

பின்பு பங்களாவில் வேலை செய்பவர்களிடம் நடத்திய விசாரணையில் உண்மைகள் பல தெரியவந்துள்ளது. லோகநாயகி, ஷாலினி என்ற அக்கா, தங்கையான இரு வேலைக்காரர்கள் வயதான தம்பதிகளுக்கு தூக்கமாத்திரையினை சாப்பாட்டில் கலந்து கொடுத்துவிட்டு வீட்டிலிருந்து பணம், நகை, தங்க பிஸ்கட் என அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக திருடியுள்ளது தெரியவந்துள்ளது. குறித்த உண்மையினை கேட்ட பொலிசார் ஆடிப் போய் உள்ளனர்.

48765 total views
loading...