திருமணமான ஒரே மாதத்தில் சுயநினைவினை இழந்த மனைவி... மனைவிக்காக காத்திருக்கும் கணவரின் சோகம்

Report
378Shares

திருமணமான இரண்டு மாதத்தில் மனைவி சுயநினைவின்றி போனதால், கணவர் ஒருவர் நிலைகுலைந்த நிலையில் நம்பிக்கையோடு மனைவி சுகமாகிவிடுவார் என்ற நம்பிக்கையில் இருந்து வருகின்றார்.

ஈரோட்டைச் சேர்ந்தவர் அருண். சீனாவில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் இவருக்கும் சுதா என்ற பட்டதாரி பெண் ஒருவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இரவரும் மென்பொருள் நிறுவத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் திருமணம் முடிந்து சீனாவிற்கு திரும்பி அருண், அங்கு வீடு பார்த்துவிட்டு அழைத்துச் செல்வதாக கூறியுள்ளார். அவர் தான் கூறிய படி வீடு பார்த்துவிட்டு, மனைவிக்கு விமான டிக்கெட்டும் முன்பதிவு செய்துள்ளார்.

ஆனால் சீனா செல்வதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு தனது சகோதருடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த போது, திடீரென தவறிவிழுந்து பின் தலையில் அடிபட்டுள்ளது. இதனை அவதானித்த டிராபிக் பொலிசார் ஒருவர் சுதாவை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

விபத்து ஏற்பட்டு 15 நிமிடத்தில் சுயநினைவினை இழந்துள்ளார் சுதா. பின்பு அடிபட்ட இரண்டு மணி நேரத்தில் மூளையில் ரத்த உறைவினை ஆப்ரேஷன் செய்து உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

பின்பு 9 நாட்கள் கழித்து கண்விழித்த சுதா, சுயநினைவு இல்லாமல் இருந்து வருகின்றாராம். தற்போது 3 மாதங்களாக வேலையை விட்டுவிட்டு அருண் பக்கத்தில் இருந்து கவனித்து வருகின்றார்.

சுயநினைவு திரும்பாத நிலையில் இருக்கும் சுதா, அவரது கணவர் அருண் சுதா என்று அழைத்தால் மட்டும் திரும்பி பார்க்கின்றார். இதனால் தனது மனைவி விரைவில் குணமாகிவிடுவார் என்ற எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டிருக்கின்றார்.

அருண் விபத்து நேரத்தில் சுதாவினைக் காப்பாற்றிய பொலிசாருக்கும், மருத்துவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

16776 total views
loading...