காதலை முறித்துக்கொண்ட பெண்.. ஆத்திரமடைந்த காதலன் தங்கைக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய அதிர்ச்சி புகைப்படம்

Report
267Shares

காதலித்து விட்டு பின் மறுத்த இளம்பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை காதலியின் தங்கைக்கு அனுப்பிய இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ரூபன் (29). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். சமீபத்தில் ரூபனின் நடவடிக்கையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அந்தப் பெண் அவருடனான காதலை முறித்துக்கொண்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து, ஆத்திரமடைந்த ரூபன் காதலிக்கும்போது எடுத்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். அதை அந்தப் பெண் பொருட்படுத்தாமல் இருந்ததால், ரூபன் அவருடைய தங்கைக்கு வாட்ஸ்அப் மூலமாக ஆபாசப் படங்களைப் பகிர்ந்துள்ளார்.

மேலும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ரூபனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

8417 total views