ரயில் நிலையத்தில் பெற்ற தந்தையை எகிறி எகிறி உதைத்த மகன்கள்... எதற்காக இந்த கொடுமை தெரியுமா?

Report
311Shares

சமீபகாலமாக சொத்திற்காக பெற்றோர்களை பிள்ளைகள் அடித்துகொடுமைப் படுத்தும் நிகழ்வு அதிகமாகி வருகின்றது. நேற்றைய தினத்தில் கோடி ரூபாய்க்கு சொத்து இருந்தும் முதியவர் ஒருவர் அனாதையாக சுற்றித் திரிந்துள்ளார்.

தற்போது கடலூர் மாவட்டத்தில் முதியவர் ஒருவரை சொத்துக்காக இரண்டு மகன்கள் கொடூரமாக தாக்கியுள்ள அவலம் ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த கீழ்அனுவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(74). இவருக்கு 4 மகன்கள் உள்ள நிலையில், அனைவரையும் கஷ்டப்பட்டு வளர்த்தும் உள்ளார். மகன்கள் வளர்ந்த இவரைக் கவனிக்கவில்லையாம்.

இதில் கடைசி மகன் நித்தியானந்தம் என்பவர் மட்டும் வெளிநாட்டில் வேலை செய்துகொண்டு தாய் தந்தையருக்கு பணம் அனுப்பியுள்ளார். மகன் அனுப்பிய பணத்தினை சேமித்து வைத்த கோவிந்தராஜ், தான் சுயமாக சம்பாதித்து வாங்கி போட்ட நிலத்தில் புதிய வீடு ஒன்றினைக் கட்டியுள்ளார். அதுமட்டுமின்றி இதனை நித்தியானந்தம் பேருக்கே எழுதியும் வைத்துள்ளார்.

இந்நிலையில் பயங்கரமாக கோபமடைந்த சிவகுமார், ரங்கநாதன் இரண்டு மகன்கள், நித்தியானந்தாவின் வீட்டிற்கு வந்து அவரது குடும்பத்தினையும், தந்தையையும் அடித்து வெளியேற்றி வீட்டினை அபகரித்துள்ளனர்.

இந்நிலையில் கோவிந்தராஜ் ரயில் நிலையத்தில் தங்கியுள்ள நிலையில், கைலியை மடித்துக்கட்டுக்கொண்டு அங்கும் வந்து அவரை மிதித்து அடித்து துன்புறுத்தி காணொளி எடுத்துள்ளனர். இதுகுறித்து பொலிசில் புகார் கொடுத்தும் எதுவும் நடக்காததால், தற்போது மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்து, தீக்குளிக்க முயன்றுள்ளார்.

தற்போது முதியவரை மீட்ட காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.