வயிற்று வலியால் துடி துடித்த சிறுமி.. எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்..!

Report
263Shares

13 வயது சிறுமியின் வயிற்றில் அரை கிலோ தலைமுடியும், ஷாம்பு பாக்கெட்டுகளும் இருப்பதைக்கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கோவையைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவர் எதை சாப்பிட்டாலும் அவருக்கு வாந்தி எடுத்துகொண்டே இருந்ததால், அவரை அவரது பெற்றோர்கள் கோவையில் உள்ள சிங்காநல்லூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அதன் பின்னர், மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது அவரது சிறுகுடலில் ஒரு கட்டி இருப்பது போல் தெரிந்தது. ஆனால் அந்த கட்டி என்ன? தெளிவாக தெரியவில்லை.

இதனையடுத்து எண்டாஸ்கோப் எடுத்துப் பார்த்தபோது தலைமுடி அதிக அளவில் இருந்தது தெரியவந்தது. அதன்பின், அந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

அறுவை சிகிச்சையின் போது அரை கிலோ அளவிற்கு தலைமுடி மற்றும் ஷாம்பு பாக்கெட்டுகள் வெளிய எடுக்கப்பட்டன. இதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்

சிறுமி மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவர் கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து வாயில் போட்டு விழுங்கி உள்ளார். இதனால் அவரது வயிற்றில் அரை கிலோ அளவிற்கு தலைமுடி ஷாம்பு பாக்கெட் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சேர்ந்துவிட்டதாக மருத்துவர்கள் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.

10424 total views