செயினை பறித்துக்கொண்டு எஸ்கேப் ஆன திருடர்கள்... இரண்டு மணி நேரத்தில் பொலிசில் சிக்க வைத்த பெண்

Report
211Shares

சிவகங்கை மாவட்டத்தில் கோவிலுக்கு சென்று வந்த பெண்ணின் கழுத்தில் இருந்த நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களை இரண்டு மணி நேரத்தில் பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் கல்லல் சந்தை பகுதியில் ரெட்டி என்ற பெண் கோவிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியவேலை, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் நகையினை பறித்துச் சென்றுள்ளனர்.

உடனே துரிதமாக செயல்பட்ட பெண் வண்டி நம்பரை பதிவு செய்துகொண்டு காவல் நிலையத்தில் சென்று புகார் கொடுத்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து அந்த எண்ணை வைத்து பொலிசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு அந்த பைக் வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்தது என்று கண்டுபிடித்துள்ளனர். பின்பு, அந்த கிராமத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட மணிகண்டன் மற்றும் வாணி கருப்பசாமி என்ற இரண்டு இளைஞர்களைக் கைது செய்ததோடு, வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், அவர்களிடம் இருந்த தங்க சங்கிலியை பறிமுதல் செய்து அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளனர். மற்ற பெண்களை போல செயினை பறிகொடுத்து விட்டு காவல்நிலையத்திற்குச் சென்று புகார் கொடுக்காமல், உடனே அந்த பைக் எண்ணைப் பதிவு செய்து துரிதமாக செயல்பட்டதற்காக பெண்ணை அங்கிருந்த பொலிசார் பாராட்டியுள்ளனர்.

9097 total views