கோடி ரூபாய்க்கு சொத்து இருந்தும் நடுத்தெருவில் அனாதையாக முதியவர்... அடித்து கொடுமைப்படுத்திய மகன், மருமகள்

Report
129Shares

சமீப காலமாக சொத்திற்கு ஆசைப்பட்டு பெற்றோரை பிள்ளைகளே அடித்து வீட்டைவிட்டு வெளியேற்றும் அவலம் அதிகரித்து வருகின்றது.

சேலத்தை அடுத்த ஆர்.கே.அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி. இவருக்கு பச்சமுத்து என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர்.

ராமசாமிக்கு சுமார் 1 கோடி மதிப்பிலான 8 ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. பிள்ளைகள் அனைவருக்கும் நல்ல முறையில் திருமணம் செய்துவந்த ராமசாமி மகன் மருமகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ராமசாமியின் அந்த பூர்வீக சொத்தை தனது பெயருக்கு எழுதித் தரும்படி மகன் மற்றும் மருமகள் இருவரும் அவரை அடித்து உதைத்து கொடுமை செய்து வந்துள்ளனர்.

இதுகுறித்து மகள்களிடம் கூறிய போது, அவர்களும் தந்தைக்கு உதவி செய்யாத நிலையில், காவல்நிலையத்திலும், மக்கம் நீதிமன்றத்தினையும் நாடியுள்ளார். அங்கும் அவருக்கு உதவி கிடைக்காத நிலையில், விரக்தியடைந்த ராமசாமி தனது சொத்து பத்திரங்களை பிளாஸ்டிக் கவர் ஒன்றில் எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியதோடு, பேருந்து நிலையத்தில் பசியோடு இருந்துள்ளார்.

இதையறிந்த சிலர் அவருக்கு உணவு கொடுத்து உதவியதோடு, தனியார் ஆதரவற்றோர் அமைப்பிடம் ராமசாமி பத்திரமாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

5873 total views