92 வயதுடைய தாயை கழிப்பறையில் தங்க வைத்து.. கொடுமைப்படுத்திய மகன்.. நெஞ்ச பதறவைக்கும் காட்சி..!

Report
161Shares

92 வயது மூதாட்டியை கழிவறையில் தங்க வைத்து கொடுமைப்படுத்திய வளர்ப்பு மகனும், மருமகளும் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடியில் கோட்ஸ், நகரை சேர்ந்தவர் 92 வயது மூதாட்டி மரிய மிக்கேல் இவருக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தால் தனது சொந்த சகோதரின் மகனான நிகோலஸ் வளர்த்துள்ளார்.

இந்நிலையில், 92 வயது மூதாட்டி மரிய மிக்கேலை சரியாக பராமரிக்காததால், கழிவறையில் தங்க வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தியுள்ளார். அந்த மூதாட்டி இரவில் குளிரில் நடுங்கியவாறு இருந்துள்ளார்.

இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் வந்த காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மற்றும் சமூக நலத்துறையினரின் நடவடிக்கையால் மூதாட்டியை மீட்கப்பட்டு கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.

மேலும், சமூக நலத்துறை அளித்த புகாரின் பேரின், மூதாட்டியை சரியாக பராமரிக்காத வளர்ப்பு மகன் நிகோலஸ் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

5930 total views