திருமணமான முதலிரவில் கணவருக்கு வந்த மெசேஜ்!... கண்ணீருடன் மனைவி

Report
308Shares

தமிழகத்தில் திருமணம் ஆன முதல் இரவில் கணவரின் உண்மை முகத்தை அறிந்த மனைவி அதிர்ச்சியடைந்த நிலையில் அது தொடர்பிலான பின்னணி வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் பால்ராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நளினகுமாரி. இவரது கணவர் ஷாஜின் காந்தி.

இந்நிலையில் தன் கணவன் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், இன்னொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதாகவும் நளினகுமாரி நாகை எஸ்பி அலுவலத்தில் புகார் ஒன்றினை தந்துள்ளார்.

அவர் கூறுகையில், 2012-ல் ஷாஜினை சந்தித்தேன். அப்போதுதான் பழக்கம் ஏற்பட்டது. காதலாக மாறியது.

எனக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன விடயத்தை சொல்லியும் அவர் என்னை ஏற்று கொண்டர். பின்னர் கடந்த 16.9.2013-ல் எங்களுக்கு திருமணம் நடந்தது.

திருமணமான அன்றைய தினம் இரவு என் கணவர் செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது.

ஒரு பெண் அனுப்பியிருந்த அந்த மெசேஜை பார்த்த பின்னரே அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். மறுநாள் இதை பற்றி கேட்டதற்கு என்னை அடித்தார். 2017-ல் நடந்த சண்டையின்போது கூட என்னை இரும்புக் கம்பியால் அடித்து என் கை எலும்பு உடைந்துவிட்டது.

கேரள சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டேன். இந்த சமயத்தில், சென்ற வருடம் ஜனவரியில் வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் புகார் தந்துள்ளேன் என கூறியுள்ளார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டு அனைத்தையும் ஷாஜின் மறுத்துள்ள நிலையில் பொலிசார் இது தொடர்பில் விசாரணை நடத்தி வருகின்றனர்.