சொகுசு கப்பலில் உலாவரும் நித்தியானந்தாவிற்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ்... அப்படின்னா என்னனு தெரியுமா?

Report
373Shares

கைலாசா என்ற நாட்டினை உருவாக்கி தனியாக வாழ்ந்து வருவதாக கூறிவரும் நித்தியானந்தாவிற்கு எதிராக சர்வதேச பொலிஸ் உதவியை நாடும் வகையில் ப்ளூ கார்னர் நோட்டீஸை குஜராத் பொலிஸ் பிறப்பித்துள்ளது.

சிறுமிகளைக் கடத்தல், பாலியல் தொல்லை, சிஷ்யைகள் கொலை என பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அரசுக்கு தண்ணீர் காட்டி வருகின்றார் நித்தியானந்தா.

இந்நிலையில் நித்தியானந்தாவைக் கண்டுபிடிக்க சர்வதேச பொலிசின் உதவியை நாடும் வகையில் அவருக்கு ப்ளூ கார்னர் நோட்டீஸை அனுப்பியுள்ளது.

ஏற்கெனவே இந்த நோட்டீஸ் கடந்த டிசம்பர் மாதமே பிறப்பிக்கவுள்ளதாக கூறிய நிலையில், தற்போது ஒரு மாதம் கடந்த நிலையில் பிறப்பித்துள்ளனர். குறித்த நோட்டீஸ் பிறக்கப்பிட்டதன் யுமூலம் குற்றப்பிரிவில் தேடப்படும் நபர் என்ற அளவில், எந்த நாட்டில் நித்தியானந்தா உள்ளாரோ அந்த நாட்டு பொலிஸ் இந்தியாவிற்கு தகவல் கொடுக்க வேண்டுமாம்.

கைலாசா என்ற பெயரை சொகுசு கப்பல் ஒன்றிற்கு வைத்து அதில் உலாவருகின்றார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நித்தியை யாராலும் பிடிக்கமுடியாது என்று அவரது சிஷ்யர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதுவே சிகப்பு கார்னர் நோட்டீஸ் அனுப்பினால் மற்ற நாட்டினர் கைது செய்து இந்தியாவில் ஒப்படைக்க வேண்டும் என்று அர்த்தமாம். ஆனால் இந்த ப்ளூ கார்னருக்கு எஸ்கேப் ஆகிவிடுவார் என்றே பெரும்பாலும் கூறப்பட்டு வருகின்றது.

you may like this...

loading...