17 வயது மகளை சீரழித்து கொலை செய்த தந்தை... தாயின் வாக்குமூலத்தால் கிடைத்த தண்டனை!

Report
76Shares

ராஜஸ்தான் மாநிலத்தில் 17 வயது சொந்த மகளை கற்பழித்து கொலை செய்த தந்தைக்கு நீதிமன்றம் தூக்குதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், கோடா அருகே உள்ள நயபுரா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் 13ம் திகதி வீட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிசாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆம் கொலை செய்யப்பட்ட பெண் 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

தீவிர விசாரணைக்கு பின்பு கற்பழித்து கொலை செய்தது குறித்த பெண்ணின் தந்தை என்பது தெரியவந்துள்ளது. குறித்த பெண்ணின் தாயிடம் விசாரணை செய்கையில் பல உண்மைகள் வெளியாகியுள்ளது.

தனது கணவர் நீண்ட காலமாக தனது மகளைக் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கொடுத்த வாக்குமூலத்தில் அடிப்படையில் பொலிசார் பெண்ணின் தந்தையை கைது செய்தனர். தற்போது நடத்தப்பட்ட டி.என்.ஏ பரிசோதனையிலும் அவர் தான் குற்றவாளி என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நீதிமன்றம் குறித்த நபருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2988 total views