பாசமாக பேசி மயக்கிய வாலிபன்!.. 17 வயது சிறுமிக்கு பிறந்த ஆண் குழந்தை

Report
193Shares

திருமணம் செய்வதாக கூறி 17 வயது சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வழக்கில் நந்தகுமார் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கொல்லிமலை ஆரியூர் நாடு ஊராட்சியின் குழிவளவு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்(வயது 22).

இவருக்கும் தெவ்வாய்பட்டி பகுதியை சேர்ந்த விமலா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது.

திருமணம் செய்து கொள்வதாக கூறி விமலாவுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார் நந்தகுமார், இதில் விமலா கர்ப்பமாகி ஆண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து விமலாவின் பெற்றோர்கள் நந்தகுமாரிடம், தனது மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளனர்.

இதற்கு நந்தகுமார் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது, இதனை தொடர்ந்து வாழவந்தி நாடு பொலிஸ் நிலையத்தில் விமலாவின் பெற்றோர்கள் புகாரளித்தனர்.

இதனடிப்படையில் நந்தகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த பொலிசார் சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

8124 total views