14 வயது சிறுவனுடன் ஆசிரியர் மாயம்... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

Report
283Shares

குஜராத்தில் 14 வயது சிறுவனை அழைத்துக்கொண்டு 26 வயது ஆசிரியர் ஒருவர் தலைமறைவாகியுள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் காந்திநகரில் உதயோக் பவன் அரசு அலுவலகத்தில் வேலை பார்ப்பவரின் 14 வயது மகன், 8ம் வகுப்பு படித்து வருகிறான். இவன் கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போகவே, பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கடைசியில் பொலிசில் புகார் அளித்தனர்.

பொலிசாரின் விசாணை முதலில் பள்ளியில் இருந்ததால், வெள்ளிக்கிழமை மாணவன் பள்ளிக்கு செல்லாததும், அங்கே வேலை செய்யும் மற்றொரு ஆசிரியர் ஒருவரையும் வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போனது தெரியவந்துள்ளது.

8ம் வகுப்பு மாணவனுடன் ஆசிரியர் தவறான பழக்கம் வைத்துள்ளது அறிந்த அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

தற்போது மாயமாகிய இருவரையும் தீவிரமாக தேடிவரும் பொலிசார், மாணவன் சம்மதத்துடன் சென்றிருந்தாலும், அது ஏற்றுக்கொள்ள முடியாததே... ஆதலால் ஆசிரியர் மீது கடத்தல் புகாரை பொலிசார் பதிவு செய்துள்ளனர்.

26 வயது ஆசிரியருடன், 8ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவனுடன் தலைமறைவாகி உள்ளது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

8915 total views