கூலித்தொழிலாளிக்கு திடீரென அடித்த அதிர்ஷ்டம்... கோடீஸ்வரரானதும் பொலிசில் தஞ்சம்! நடந்தது என்ன?

Report
241Shares

கேரளாவில் லொட்டரி சீட்டு வாங்கியதில் 1 கோடி ரூபாய் பரிசு பெற்ற கூலித்தொழிலாளி தனது பாதுகாப்பு வேண்டும் என்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கேரளா மாநிலத்தில் லொட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகமாக இருந்து வருகின்றது.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் தாஜ் முல்ஹக் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக தங்களது மாநிலத்தில் நிலவிய வறுமையின் காரணமாக கூலி வேலை செய்து பிழைக்க கேரளாவில் தஞ்சமடைந்தார்.

கேரளாவிலேயே திருமணம் செய்து கொண்ட அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன . குடும்ப வறுமைக்கு இடையிலும் லொட்டரி சீட்டு வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு லொட்டரி ஒன்றை வாங்கிய தாஜ் முல்ஹக்கு எதிர்பாராதவிதமாக ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. தாஜ் முல்ஹக்கிற்கு பரிசு விழுந்ததும் பலரும் அவருக்கு வாழ்த்து கூறினார்.

ஆனால் சிலர் அவரிடமிருந்த சீட்டை பறிக்க முயன்றதாகவும், பரிசுத் தொகையினைஎப்படி வாங்குவது என திகைத்துள்ளார். எனவே தனக்கு பாதுகாப்பு அளிக்கும்படி கோழிக்கோடு காவல் நிலையத்தில் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

புகாரை பெற்ற பொலிசார் உண்மையிலேயே அவருக்கு பரிசுத்தொகை விழுந்துள்ளதா என்று விசாரித்த பின்பு, அவருக்கு சேர வேண்டிய பரிசுத்தொகையினை வாங்கிக் கொடுத்துள்ளனர்.

இதனால் கோழிக்கோடு பொலிசாருக்கு தாஜ் முல்ஹக் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளதுடன் இது நாள் வரை நாங்கள் அனுபவித்த கஷ்டங்கள் தீர்ந்துவிட்டது லொட்டரி சீட்டில் கிடைத்த பணத்தை வைத்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழப்போவதாகவும் கூறியுள்ளார்.