ஒரே சேலையில் மரத்தில் தூக்கில் தொங்கிய புதுமணத் தம்பதி... பொங்கல் கொண்டாட வந்த இடத்தில் நிகழ்ந்த சோகம்

Report
206Shares

பொங்கல் கொண்டாட உறவினர் வீட்டிற்குச் சென்ற புதுமணத் தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் சித்தூர் அடுத்த குந்தவாழுரைச் சேர்ந்த கார் ஓட்டுநரான தேவராஜ்(22). அதே பகுதியைச் சேர்ந்த காயத்ரி(19). இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பெற்றோரின் எதிர்ப்பினை மீறி வீட்டைவிட்டு வெளியேறிய காதல் ஜோடி ஐந்து மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டதுடன், பெங்களூரில் தேவராஜ் கார் ஓட்டி வந்துள்ளார்.

இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கருங்காலி குப்பம் சமத்துவபுரத்தில் வசித்து வரும் தேவராஜின் சித்தி சந்திராவின் வீட்டிற்கு இருவரும் வந்துள்ளனர். பெற்றோர்கள் தங்களது திருமணத்திற்கு இன்னும் சம்மதம் தெரிவிக்காத மன வருத்தத்தில் இருந்த இவர்கள், இரவு வீட்டிற்கு வெளியே இருந்த மரத்தில் ஒரே சேலையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளனர்.

பின்பு பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், வழக்கு பதிவு செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

9743 total views