நுனிநாக்கில் ஆங்கிலம்!... பிச்சையெடுக்கும் பொறியியல் பட்டதாரி- பின்னணி காரணம்

Report
138Shares

ஒடிசாவில் பிச்சையெடுக்கும் நபர் ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கியதை பார்த்து பொலிசார் வாயடைத்து போன சம்பவம் நடந்துள்ளது.

ஒடிசாவின் பிரசித்த பெற்ற கோவில்களில் ஜெகன் நாதர் கோவிலும் ஒன்று, இங்கு ஏராளமான நபர்கள் பிச்சையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கிரிஜா சங்கர் மிஸ்ரா என்பவர் பிச்சையெடுக்கும் இடத்தில் ரிக்ஷாக்காரர் ஒருவர் வாகனத்தை நிறுத்தியுள்ளார்.

இதில் இருவருக்கும் சண்டை எழ பொலிசார் வரை சென்றுவிட்டது, உடனடியாக இருவரையும் பொலிஸ் நிலையம் அழைத்து சென்ற அதிகாரிகள் புகார் மனு எழுதிக் கொடுக்க சொன்னார்கள்.

மிக சரளமாக ஆங்கிலத்தில் கிரிஜா மனு எழுத, பொலிசார் திக்குமுக்காடி போயுள்ளனர், அவரிடம் விசாரித்ததில் தந்தை பொலிஸ் அதிகாரி என்பதும், பிடெக் படித்த பட்டதாரி என்பதும் தெரியவந்தது.

மேலும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த போது, மேனேஜருடன் ஏற்பட்ட பிரச்சனையால் வேலையை விட்டு நின்றதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கிரிஜாவின் குடும்பத்தை கண்டறிந்து அவர்களிடம் கொண்டு போய் சேர்க்க பொலிசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

loading...