கோபிநாத் வீட்டில் ஏற்பட்ட சோகம்... நேரில் சென்று ஆறுதல் கூறிய பிரபலங்கள்

Report
799Shares

சமூக கருத்துகளை முன்வைத்து நடத்தப்படும் நீயா நானா என்ற விவாத நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கோபிநாத். இவர் ஏற்கனவே நிமிர்ந்து நில், திருநாள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இயக்குநர் பாரதி கணேஷ் 'இது எல்லாத்துக்கும் மேல' படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இவருடன் நடிகர் சதீஷ், அக்ஸிதா, ராகுல், ஷோபன், ஆதித்யா, மவுரியா ஆகியோர் குழந்தை நட்சத்திரங்களாக நடிக்கின்றனர்.

இந்நிலையில் கோபிநாத்தின் தந்தை இவருடைய தந்தை சந்திரன் நேற்று உடல்நிலை சரியில்லாமல் காலமானார்.

இதையடுத்து கோபிநாத்தின் சொந்த ஊரான அறந்தாங்கியில் உள்ள அருகன் குளக்கரையில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது தந்தையின் உடல் இன்று காலை இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

கோபிநாத் குடும்பத்தினருக்கு சின்னதிரையினர் பலர் நேரில் சென்று ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

25396 total views