தாய் மற்றும் நண்பனை துண்டு துண்டாக வெடிக்கொன்ற மகன்.. பின்னணியில் நடந்தது என்ன?

Report
299Shares

தாய் மற்றும் நண்பனை கொடூரமாக கொலை செய்த நபர் தற்போது 2 ஆண்டுகளுக்கு பின்பு பொலிசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

கோழிக்கோடு அருகே முக்கம் கிழக்கு மணாஞ்சேரியை சேர்ந்தவர் ஜெயவள்ளி. ஏகப்பட்ட சொத்துக்களுக்கு சொந்தக்காரராவார். இவரது மகன் விர்ஜு (53). தனது பெயருக்கு சொத்தை எழுதிவைக்குமாறு தாயிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் சொத்துக்களை தர முடியாது என்று கூறிய தாய் ஜெயவள்ளியை கொலை செய்வதற்கு முடிவெடுத்துள்ளார் விர்ஜு.

இதனால் தனது நண்பர் இஸ்மாயிலின் உதவியுடன் திட்டம் தீட்டினார். இஸ்மாயில் 2 லட்சம் பணம் தருமாறு கேட்டுள்ளார். ஆரம்பத்தில் சரியென்று கூறிய விர்ஜு, 2014ம் ஆண்டு தூங்கிக்கொண்டிருந்த தனது தாயினை இரண்டு பேரும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.

பின்பு சடலத்தினை மின்விசிறியில் தொங்கவிட்டுள்ளார். தற்கொலை என்றும் நாடகமாடி அனைவரையும் நம்ப வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து 2017ம் ஆண்டு இஸ்மாயில் கடற்கரையில் பிணமாக கிடந்துள்ளார். தலை, உடல் பாகங்கள் என அனைத்தும் தனித்தனியாக கிடந்ததால் யாரென்று அடையாளம் தெரியாத நிலையில், பின்பு தான் இஸ்மாயில் என்று அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டார்.

பொலிசார் விர்ஜுவிடம் விசாரணை மேற்கொள்ள முயன்றதும், அவர் தலைமறைவாகியுள்ளார். இரண்டு வருடங்கள் கழித்து தற்போது சிக்கிய விர்ஜுவிடம் விசாரணை மேற்கொண்டதில், அனைத்து உண்மைகளையும் கூறியுள்ளார்.

தாயின் கொலைக்கு பேசப்பட்ட பணத்தினை கேட்டு இஸ்மாயில் அடிக்கடி தொந்தரவு செய்ததால், 2017ம் ஆண்டு அவரை வீட்டிற்கு அழைத்து மதுவருந்தவைத்து குத்திக் கொலை செய்ததாகவும், பின்பு உடலை துண்டு துண்டாக வெட்டி சாக்குமூட்டைக்குள் அடைத்து கடற்கரையில் போட்டதாகவும் கூறியுள்ளார்.

11782 total views