பிரசவ அறையில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கீழே கிடந்த குழந்தை... பிறந்து இரண்டு மணி நேரத்தில் நடந்தது என்ன?

Report
209Shares

உத்திரபிரதேசத்தில் ஆப்ரேஷன் தியேட்டருக்குள் நாய் நுழைந்து பிறந்து இரண்டு மணி நேரமே ஆன பச்சிளங்குழந்தையை கடித்துள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசத்தில் ஃபருகாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று சட்டப்படி பதிவு செய்யாமல் இயங்கி வந்துள்ளது.

குறித்த மருத்துவமனையில் நபர் ஒருவர் தனது மனைவியை பிரசவத்திற்காக அனுமதித்துள்ளார். குறித்த பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பெண்ணை மட்டும் நார்மல் வார்டுக்கு மாற்றிய மருத்துவர் குழந்தையை சிறிது நேரம் கழித்து மாற்றுவதாக கூறியுள்ளார்.

ஆனால் சில மணி நேரத்தில் குழந்தை இறந்துவிட்டதாக வந்து அறிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்பு உறவினர் ஒருவர் கூறுகையில், பிரசவஅறையிலிருந்து சிறிது நேரத்தில் நாய் ஒன்று வெளியேறியதாகவும், அப்பொழுது குழந்தை ரத்தக்காயங்களுடன் தரையில் கிடந்ததை அவதானித்ததாக கூறியுள்ளதையடுத்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் கழுத்து மற்ற இடங்களில் நாயின் பற்கள் மிகவும் ஆழமாக பதிந்து உயிரற்ற நிலையில் குழந்தை இருந்துள்ளது. தற்போது குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த மருத்துவமனையும் சீல் வைக்கப்பட்டதுடன், மருத்துவர்கள் மற்றும் பிரசவத்தின் போது இருந்த செவிலியர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

loading...