பிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ திடீர் தற்கொலை முயற்சி... மகளுக்கு எழுதிவைத்த உருக்கமான கடிதம்

Report
470Shares

பிரபல சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ, சீரியல் நடிகரான இவரது கணவர் ஈஸ்வர் வேறொரு சீரியல் நடிகையுடன் தொடர்பு வைத்தததையடுத்து சமீபத்தில் பிரச்சினை பூகம்பமாக வெடித்து வந்தது.

தற்போது மகளுக்கு கடிதம் ஒன்றினை எழுதி வைத்துவிட்டு, பிரபல பிக்பாஸ் பிரபலமான ரேஷ்மாவிற்கு வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி வைத்துவிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

சின்னத்திரைகளில் நடித்து வருபவர் நடிகை ஜெயஸ்ரீ. முதல் கணவருக்கு பிறந்த மகள் இருக்கும் நிலையில் 2-ஆவது சின்னத்திரை நடிகரான ஈஸ்வரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் ஈஸ்வருக்கும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமிக்கு தொடர்பு இருப்பதாகவும், அவரைத் திருமணம் செய்வதற்கு தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் ஜெயஸ்ரீ புகார் அளித்தார்.

இதனையடுத்து ஈஸ்வர் மற்றும் அவரது தாய் கைது செய்யப்பட்டு, பின்பு ஜாமீனில் வெளியில் வந்தனர். இந்நிலையில் காவல்நிலையம், நீதிமன்றம் என அழைந்த ஜெயஸ்ரீ தற்போது வீட்டில் தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தற்கொலைக்கு முன்பு பிக்பாஸ் பிரபலமான ரேஷ்மாவிற்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜில் இதுவரை தனக்கு கொடுத்த ஆறுதலுக்கு நன்றி, அவ்வப்போது தனது குழந்தையை பார்த்துக்கொள் என்று அனுப்பியுள்ளார்.

இதனையடுத்து வீட்டில் வந்த பார்த்தபோது ஜெயஸ்ரீ மயக்கமடைந்து காணப்பட்டதையடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொலிசாரின் சோதனையில் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் எந்த சூழலிலும் டான்ஸ் ஆடுவதை நிறுத்தாதே என தனது மகளுக்கு அறிவுரை வழங்கிய ஜெயஸ்ரீ தனது முடிவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகளை தொல்லை செய்ய வேண்டாம் என ஈஸ்வருக்கு அதே கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

loading...