மனைவி, மகன்களை கழுத்தறுத்து கொலை செய்த நபர்... சோகத்திற்கு பின்னணி என்ன?

Report
55Shares

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நகைக்கடை அதிபர் ஒருவர் தனது குடும்பநபர்களை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

பட்டுக்கோட்டை அருகே உள்ள ஊரணி என்ற கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி செல்லம். மகன்கள் நிகில் மற்றும் முகில். இவர்கள் குடும்பத்துடன் திருச்சி சென்று அங்கே விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர். விடுதியில் கோவிலில் தரிசனம் செய்வதற்கு வந்துள்ளதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு 8.30 மணி அளவில் ஊரணியில் உள்ள செல்வராஜின் உறவினர் குரு கணேஷ் என்பவருக்கு அவரது செல்போனில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் செல்வராஜ் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக குறிப்பிட்டு இருந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குரு கணேஷ் திருச்சியில் உள்ள குறிப்பிட்ட அந்த தங்கும் விடுதிக்கு இரவு 10.30 மணி அளவில் வந்தார். விடுதி ஊழியர்களின் உதவியுடன் செல்வராஜ் தங்கியிருந்த அறைக்குச் சென்றுள்ளார்.

அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது செல்லம், நிகில், முகில் ஆகிய 3 பேரும் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாகவும், செல்வராஜும் ரத்தக்காயத்துடன் உயிருக்கு போராடியுள்ளார்.

இதுபற்றி ஓட்டல் ஊழியர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதும், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்வி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் நிகல் மூளைவளர்ச்சி குன்றியவராக இருந்ததால், குடும்பத்தில் ஏற்பட்ட மனஉளைச்சலில் இவ்வாறான முடிவினை எடுத்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.

loading...