தகாத உறவை 5 வயது மகன் கண்டதால்.. தாய் செய்த கொடூரம்.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!

Report
899Shares

தகாத உறவால் 5 வயது மகனை கயிற்றால் கழுத்தை இறுக்கி தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ளது வி.குச்சம்பட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் ராம்குமார் (28). இவரது மனைவி ஆனந்தஜோதி (25). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. இவர்களுடைய மகன் ஜீவா (5), மகள் லாவண்யா (3).

இந்நிலையில், சம்பவதன்று சிறுவன் ஜீவா பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து படுத்து தூங்கியுள்ளான். பின்னர் மாலையில் தூங்கிய ஜீவாவை ஆனந்தஜோதி எழுப்பியுள்ளார். அப்போது ஜீவா பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளான்.

உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்., ஜீவாவின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஜீவா இறந்து பலமணி நேரம் ஆகியுள்ளது என்றும் கழுத்தில் கயிறு போட்டு இறுக்கிய தடயமும், நகக் கீறல் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பின்னர் கதறி அழுத அப்பா, பின்னர் மனைவியிடம் கேட்டுள்ளார். அவர் தனக்கு ஏதுவும் தெரியாது என கூறியுள்ளார். இதையடுத்து, மனைவின் பதிலில் சந்தேகம் அடைந்த ராம்குமார், மகனின் சாவு குறித்தும், மனைவி ஆனந்தஜோதி மீது சந்தேகம் உள்ளதாகவும் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

விசாரணையை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், ஆனந்தஜோதியை அழைத்து விசாரணை செய்ததில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

அப்போது, ஆனந்தஜோதிக்கும், ராம்குமார் உறவுக்காரர் மருதுபாண்டி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர்கள் நெருக்கமாக இருந்ததை ஜீவா பார்த்துள்ளான். இதனால் தங்கள் கள்ள தொடர்பு ராம்குமாருக்கு தெரிந்துவிடுமோ என்று நினைத்துள்ளனர்.

இதனால் ஆனந்தஜோதியும், மருதுபாண்டியும், சேர்ந்து தூங்கி கொண்டு இருந்த ஜீவாவின் வாயை பொத்தி கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து வழக்குப்பதிவு செய்து ஆனந்தஜோதி,மருதுபாண்டி ஆகிய 2 பேரையும் வி.சத்திரப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

தன்னுடைய தகாத உறவுக்காக பெற்ற மகனையே தாய் கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதியில் கடும் ஆத்திரத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

loading...