சுற்றுலா சென்றுவிட்டு குழந்தைகளை கையில் பிடித்துக் கொண்டு ரயில் முன் பாய்ந்த தம்பதி... பின்னணியில் இருக்கும் சோகம்

Report
247Shares

கடன் பிரச்சினையினால் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த 4 பேர் சுற்றுலா சென்றுவிட்டு இறுதியில், ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு பெற்றோர் தற்கொலை செய்த அன்றே இந்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. இதில் குழந்தைகளின் சம்மதத்துடன் தற்கொலை அரங்கேறியுள்ளது.

உறையூரை சேர்ந்த உத்தராபதி - சங்கீதா தம்பதிகளுக்கு, அபினயஶ்ரீ(18) என்ற மகளும், ஆகாஷ்(13) என்ற மகனும் இருந்துள்ளனர்.

கடன் பிரச்சினை அதிகமானதால் சமாளிக்க முடியாத இவர்கள் தற்கொலை முடிவிற்கு வந்துள்ளனர். ஆனால் தற்கொலைக்கு முன்பு கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டது மட்டுமின்றி குழந்தைகளையும் மகிழ்விக்க கொடைக்கானல் சுற்றுலா சென்றுவிட்டு பின்பு ரயில் முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

திருச்சி மலைக்கோட்டைக்கு சென்று உச்சி பிள்ளையாரை கும்பிட்டுவிட்டு, அங்கிருந்து கொடைக்கானல் சென்றுள்ளனர். அங்கு மகிழ்ச்சியாக சுற்றிப்பார்த்துவிட்டு, ஹொட்டல் ஒன்றில் 4 பேரும் உணவருந்திவிட்டு பின்பு இரவு நேரத்தில் ரயில்நிலையத்தில் நின்று கொண்டுள்ளனர்.

இரவு 11 மணியளவில் மதுரையிலிருந்து திண்டுக்கல் செல்லும் சிறப்பு ரயில் வந்துள்ளது. உத்திராபதி மகன் ஆகாஷின் கையையும், சங்கீதா மகள் அபினயஸ்ரீயின் கையையும் பிடித்து கொண்டு, ரயில் வந்ததும் ஒரே நேரத்தில் 4 பேரும் பாய்ந்துள்ளனர். இதில் அனைவரது உடல் பாகங்களும் சிதறி போயுள்ளது.

அவர்களிடமிருந்து விழுந்து கிடந்த ஆதார் கார்டை வைத்து அடையாளம் காணப்பட்டதுடன், உத்திராபதி சட்டை பையில் இருந்த டிக்கெட்டுகள் அவர்கள் சென்ற இடத்தினை தெளிவுபடுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்தடுத்து கடன் பிரச்சினையினால் 2 குடும்பங்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளது பேரதிர்ச்சியாக உள்ளது.

loading...