உடையிலேயே சிறுநீர் கழித்த சிறுமி.. நெஞ்சில் ஏறி மிதித்த கொடூர தம்பதி! பிறகு நேர்ந்த பயங்கரம்!

Report
338Shares

தாயும் தனது மகளுக்கு நல்ல படிப்பு மற்றும் வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கையில் அவர்களுடன் அனுப்பி வைத்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தந்தை இல்லாத குழந்தையை படிக்க வைப்பதாக கூறி அழைத்துச் சென்று கொலை செய்த கணவன் மனைவியை பொலிசார் தேடி வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் மற்றும் அனிதா.

இவர்கள், அவுரங்காபத்தில் வசித்து வரும் தந்தை இல்லாத சிறுமியை படிக்க வைப்பதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சிறுமியின் தாயும், தனது மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைகிறது என்ற நம்பிக்கையில் அவர்களுடன் அனுப்பி வைத்துள்ளார்.

அவ்வபோது தனது மகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வந்த தாய் கடந்த சில மாதங்களாக சிறுமியிடம் பேச முடியவில்லை.

இதனால், சந்தேகமடைந்த தாய் தனது மகள் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரைப் பெற்ற பொலிசார், சிறுமி குறித்து விசாரித்த நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்துள்ளது.

அதாவது சிறுமி நகரத்தை முதல் முறையாக பார்த்ததால், அங்கிருக்கும் குடியிருப்புகளில் உள்ள கழிவறைகளை எப்படி பயன்படுத்துவது என்பது தெரியாமல் தனது உடையிலேயே சிறுநீர் கழித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் சிறுமியின் நெஞ்சில் எட்டி உதைத்துள்ளார். அந்த சமயமே மூச்சுத் திணறிய சிறுமி உயிரிழந்துள்ளார். இதனை மறைக்க வாட்டர் டேங்கில் அடைத்து சிமெண்ட் கொட்டி மூடி மறைத்துள்ளது விசாரணையில் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.

மேலும் சிறுமியை படிக்க வைப்பதாக அழைத்துச்சென்று வீட்டு வேலைகளையும் மனைவிக்கு உதவியாக தையல் வேலைகளையும் சிறுமியை செய்ய வைத்தது தெரியவந்தது.

இந்நிலையில், சிறுமியை துன்புறுத்தியதற்காக மனைவி அனிதாவை போலீசார் உடனடியாக கைது செய்தனர். கணவன் பிரகாஷை தப்பி ஓடிவிட்டார். போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

14060 total views