அடுத்த வீடியோவை வெளியிட்ட நித்தி.. இந்த முறை மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களுக்கு.. என்ன சொல்லிருக்கிறார் தெரியுமா?

Report
263Shares

சமீப நாட்களாக பல சர்ச்சைகளில் சிக்கி பொலிசார் தீவிரமாக தேடி வரும் நித்யானந்தா அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தினமும் ஏதாவது ஒரு வீடியோவை வெளியிட்டு சர்ச்சை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் இவரை நெட்டிசன்கள் பல மீம்ஸ்களை போட்டும் கலாய்த்து வரும் நிலையில், அதையும் தனக்கு சாதமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் நித்யானந்தா.

அதில், ஆங்கிலத்தில் நோ சூடு, நோ சொரணை, நோ பிராப்ளம் என விளக்கமளித்தார். மேலும் தனது சத்சங்கத்தின் போது சினிமா ஹீரோக்கள் போன்று பஞ்ச் வசனங்கள் பேசுவது ஏன் என்றும் விளக்கமளித்துள்ளார்.

பொறுத்தது போதும் பொங்கி எழு என்ற வசனத்தை கூறிய நித்யானந்தா தனது சீடர்களை ஞானப் போரில் கலந்து கொள்ளுமாறும் வீர உரையாற்றி உள்ளார்.

மீம்ஸ் போடும் மாம்ஸ்களா உங்கள் மீம்ஸ்களால் தான் கைலாசா பிரபலமானது என கூறி உள்ளார்.

இதனைத்தொடர்ந்து அமெரிக்காவில் ஒளிந்திருப்பதாக வந்த தகவலின்படி, 18ம் தேதிக்குள் அவரை எங்கிருக்கிறார் என்பதை கண்டுப்பிடித்து சொல்லவேண்டும் என அம்மாநில அரசு கர்நாடக பொலிசாரை எச்சரிக்கை விடுத்துள்ளது.