இலங்கையை குறி வைத்த சர்ச்சைக்குரிய நித்தியானந்தா? கடும் அதிர்ச்சியில் உறைந்த தமிழர்கள்

Report
287Shares

என்னுடைய அடுத்த இலக்கு இலங்கை - யாழில் உள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் தான் என சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

இது இலங்கையர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் இந்தியா பொருளாதார ரீதியாக செழிக்கும் . சிவத்தை உணர்ந்தால் உங்களுக்குள் கைலாசா உருவாகும்.

என்னுடைய அடுத்த இலக்கு இலங்கையில் உள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் தான். நான் அரசியல் பற்றி பேச வரவில்லை. ஆனால் ஒரு வி‌ஷயம் சொல்ல விரும்புகிறேன். அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் இந்தியா பொருளாதார ரீதியாக செழிக்கும்.

ஏனெனில் சமூகத்துக்கு பங்களிப்பது தான் ராமரின் கொள்கை. அயோத்தியில் ராமர் கோவில் கட்ட யார் நிதி அளித்தாலும் அது இந்திய பொருளாதாரத்துக்கு பங்களிப்பது ஆகும்.

நான் எந்த அமைப்பிலும் இல்லை. எனது சீடர்களும் சந்நியாசிகளும் உங்களால் முடிந்த அளவுக்கு ராமர் கோவில் கட்டுமானத்தில் பங்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நான் எனது வழியில் ராமர் கோவிலுக்கு பங்களிப்பேன். என்னிடம் ஒன்றும் இல்லை என நான் கூறப் போவது இல்லை. லட்சுமி என்னுடன் இருக்கிறாள் என்றும் கூறி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த தகவல் வைரலானதை தொடர்ந்து யாழில் உள்ள நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கருத்து வெளியிட்டுள்ளார்.

நல்லை ஆதீனத்துக்கும் சுவாமி நித்தியானந்தாவுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனை நாம் சர்ச்சைக்குரிய கருத்தாகவே பார்க்கின்றோம். சுவாமி நித்தியானந்தாவுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்புகளும் இல்லை.எமது இந்து மதப் பணிகளுக்கு இடையூறு வரும் வகையிலும் எமக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத்தின் மீது குறி வைப்பதாக கூறியிருப்பது யாழ். தமிழர்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

loading...