நித்யானந்தா இருப்பது இங்கு தான் உறுதியானது.. ஐபி முகவரியை கண்டறிந்த பொலிசார்.. அடுத்த வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சி..!

Report
620Shares

சமீப நாட்களாக நித்யானந்தா எங்கிருக்கிறார் என்று பல தகவல்கள் இணைய ஊடகங்களில் வெளியாகி கொண்டே தான் இருக்கிறது. ஆனாலும் அதிகாரப்பூர்வமாக அவரை இருக்கும் இடத்தை கண்டுப்பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள் காவல் துறையினர்கள்.

இந்நிலையில், நித்யானந்தா யூடியூப்பில் வீடியோ மூலம் தினமும் பேசும் கணிணியின் ஐபி முகவரியை பொலிசார் ஆய்வு செய்தனர். அந்த முகவரி பனாமா கால்வாய்க்கும், அமெரிக்காவில் உள்ள தீவான வீர்ஜீனியாவில் ஒளிந்திருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை அவருடன் இருக்கும் ஜனார்த்த சர்மாவின் மகள்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் உறுதியாக எங்கிருக்கிறார் என்று கூற முடியவில்லை என்று சிஷ்யைகள் பிரமாண பத்திர தகவல் மூலம் அம்பலமாகியுள்ளது.

இந்த தகவலை வைத்துக்கொண்டுதான் அவர் அங்கிருக்கிறார் என்று தெரிந்துள்ளது. எனவே அமெரிக்காவிடம், இந்தியா முறையிட்டு நித்தியானந்தாவை கைது செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இதைத்தொடர்ந்து தற்போது நித்தியானந்தா அடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சிவத்தை உணர்ந்தால் உங்களுக்குள்ளும் கைலாசா உருவாகும். என்னுடைய அடுத்த இலக்கு ஸ்ரீலங்காவில் உள்ள நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனம் தான்.

நான் இப்போது அரசியல் பற்றி பேச வரவில்லை. ஆனால் ஒரு வி‌ஷயம் மட்டும் சொல்ல ஆசைப்படுகிறேன்.. அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டால் இந்தியா பொருளாதார ரீதியாக செழிக்கும்.

அடுத்ததாக ராவணனை பற்றி, "ராவணன் நேரடியாக கைலாசத்தை தொட்டு தூக்க முயன்றான். கைலாசத்தில் உள்ள சிந்தாமணி மண்டபம் தான் கைலாசத்தின் அருள் பொலிவுக்கு காரணம் என நினைத்தான்.

உடனே எனக்கு அந்த மண்டபம் வேண்டும் என சிவனிடம் கேட்டான். சிவனும் எடுத்துக்கொள் என்று கூறிவிட்டார். இந்த முட்டாள் ராவணனும் அந்த சிந்தாமணி மண்டபத்தை எடுத்து ஸ்ரீலங்காவில் தான் வைத்தான்" என்று பேசியுள்ளார்.

20515 total views