நிர்பயா வன்புணர்வு வழக்கு... தயாரானது தூக்கு கயிறு..! குற்றவாளிகளிகளுக்கு கடைசி நாள் இது தான்

Report
288Shares

டெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி பேருந்தில் 6 பேர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில், இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் 6 கொடூரர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தால், நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பல இடங்களில் நீதி கேட்டு போராட்டம் நடந்தது.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் குமார், முகேஷ் சிங், ராம் சிங், முகமது அப்ரோஸ் 6 பேரை டெல்லி போலீசார் கைதுசெய்தனர்.

குறித்த 6 குற்றவாளிகளில் ஒருவர் 18 வயதிற்குட்பட்டவர் என்பதால் அவரை சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

மீதமுள்ள 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. 5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங், டெல்லி திகார் சிறையில் இருக்கும் போது தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் மற்ற 4 பேர் கடுமையான பாதுகாப்பு தண்டனை அனுபவித்து வந்தனர். தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். சுப்ரீம் கோர்ட்டு 4 பேரின் தூக்கு தண்டனையை உறுதிசெய்தது. குற்றவாளிகளின் கருணை மனுவும் நிராகரிக்க்ப்பட்டது.

இந்நிலையில், தூக்குப் போட போவதாக வாரண்ட்டும் நீதிமன்றம் வழங்கியுள்ளது. சட்டப்படி கருணை மனு நிராகரிக்கப்பட்ட 14 நாட்களுக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும். இதனால் 4 பேரும் டிச.,16 ம் தேதி தூக்கிலிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

இச்சம்பவத்தை அறிந்த நிர்பயாவின் தாய் டிசம்பர் 16ஆம் தேதி அவர்களின் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் தனது மகளை ஆத்மா சாந்தி அடையும் என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

loading...