நானும் தமிழன் தான்! லண்டன் தொழிலதிபர் பெருமிதம்

Report
332Shares

பிறப்பால் தான் ஒரு தமிழன் என லண்டனை தலைமையகமாக கொண்ட விர்ஜின் குழுமத்தின் நிறுவனர் ரிச்சர் ப்ரான்ஸன் தெரிவித்துள்ளார்.

ரிச்சர் ப்ரான்ஸன் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.

இந்நிலையில் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், “ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக எனது உயிரணுவை பரிசோதித்தபோது நான் தமிழர்களோடு ஒன்றுபட்ட டி.என்.ஏவை கொண்டிருப்பது தெரிய வந்தது.

ஒவ்வொரு தமிழரையும் பார்க்கும்போது இவர் நமது உறவுக்காரராக இருக்கலாம் என நினைத்துக் கொள்வேன்.

என்னுடைய மூதாதையர்கள் 1793ல் தமிழகத்தில் உள்ள கடலூரில் நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அப்போது எனது மூதாதையரில் ஒருவர் தமிழ்பெண்ணான ஆர்யா என்பவரை மணம் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

loading...