நடை சாத்தப்பட்ட பின் ஊஞ்சலாடிய பத்ரகாளியம்மன்.. திகைத்துப்போன பக்தர்கள்.. வெளியான சிசிடிவி காட்சிகள்..!

Report
375Shares

ஈரோடு மாவட்டம், அந்தியூர் கோவிலில், நடை சாத்தப்பட்ட பின்பு பத்ரகாளியம்மன் ஊஞ்சலாடும் சிசிடிவி காட்சிகளை கண்ட பக்தர்கள் பரவசமடைந்துள்ளனர்.

கார்த்திகை தீபத்தன்று, அந்தியூரில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் வழிபாடுகள் முடிந்து, இரவில் நடை சாத்தப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து ஊஞ்சலாடும் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கோவில், அலுவலர் சரவணன் அன்றைய தின பதிவான சிசிடிவி காட்சிகளை பார்த்த பொழுது, கருவறை முன்பு உள்ள திரையில் வெள்ளை நிறத்தில் ஒரு உருவம் ஊஞ்சல் ஆடுவது போன்று பதிவாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும், சுமார் இரண்டு மணி நேரம் இந்த காட்சி தெரிந்ததாகவும், இது அம்மனின் ஊஞ்சல் உற்சவ காட்சி என்றும் பக்தர்கள் பரவசத்துடன் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட வீடியோவை இங்கே அழுத்தி காணலாம்...
loading...