உளுந்துவடையால் பரிதாபமாய் பலியான நபர்!... வெளியான அதிர்ச்சி சம்பவம்

Report
176Shares

முதியவர் ஒருவர் குடிபோதையில் சைட் டிஷ்ஷாக உளுந்துவடை சாப்பிட்டு தொண்டையில் சிக்கி கொண்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், திருப்பாதிரிபுலியூரைச் சேர்ந்தவர் தான் மணி. 75 வயதான இவர் மதுபழக்கத்துக்கு அடிமையானவர். இவர் தினசரி சாராயம் குடிக்க வேண்டும் என்பதற்காக அருகே உள்ள புதுச்சேரிக்கு வந்து குடித்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அப்படி சம்பவதன்று முதியவர் மணி சாராயம் குடிக்க சென்றுள்ளார். அப்போது சரக்குக்கு சைட்டிஷ்ஷாக உளுந்து வடையை சாப்பிட்டுக்கொண்டே சாராயத்தை குடித்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக வடை அவரது தொண்டையில் சிக்கிக்கொண்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டு துடித்துள்ளார். இதனைக்கண்டு ரோந்து பணியில் இருந்த காவலர்களும், மற்ற குடிமகன்களும் தண்ணீர் குடித்து உதவியுள்ளனர்.

ஆனாலும், வடை தொண்டையில் சிக்கி கொண்டு வராததால், மயங்கி விழுந்துள்ளார். அதன் பின்னர் அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வடை தொண்டையில் சிக்கிக்கொண்டதால் ஏற்பட்ட மூச்சுத் திணறலால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் வடையால் முதியவருக்கு ஏற்பட்ட சோகத்தை பரபரப்பாக பேசியுள்ளனர்.

loading...