பிரியங்கா ரெட்டி கொலை வழக்கு.. குற்றவாளிகளின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த உண்மை தகவல்!

Report
401Shares

கடந்த வாரம் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வன்புணர்வு செய்யப்பட்டு எரித்துகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நால்வரும் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், விசாரணையின் போது தப்பிக்க முயன்றதால் தான் என்கவுண்டர் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து, இந்த என்கவுண்டருக்கு பல தரப்பினர் ஆதரவு தெரிவித்தாலும், பெரும்பாலானோர் நீதிமன்றத்தின் முன் நிறுத்தாமல் நீங்கள் எப்படி சுட்டுக் கொல்லலாம் என விமர்சித்து வந்தனர்.

இதனால், நீதிமன்றம் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யப்படுவதை வீடியோவாக முழுவதும் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட குற்றவாளிகள் நால்வரின் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவு இன்று வெளியாகியுள்ளது.

அதில், அதில், நான்கு பேரையும் துப்பாக்கியால் சுட்ட நிலையிலும் அவர்கள் உடலுக்குள் குண்டுகள் தங்கவில்லை என்று தெரியவந்துள்ளது.

அதிலும், குறிப்பாக முக்கிய குற்றவாளியான முகமது பாஷா உடலில் 4 துப்பாக்கி துண்டுகள் துளைத்துள்ளது என்றும் நவீன், சின்ன கேசவலு மற்றும் ஷிவா ஆகிய மூவரின் உடலில் மூன்று துப்பாக்கி குண்டுகள் துளைத்துள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனாலும், அவர்களின் உடலில் துப்பாக்கி குண்டுகள் தங்காத நிலையில், அவை கிடைத்த பின்னரே யாருடைய துப்பாக்கியிலிருந்து சென்றுள்ளது என்பது தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

loading...