இன்ஸ்டாகிராமில் செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்ட வாலிபருக்கு நேர்ந்த விபரீத சம்பவம்.. அதிர்ந்துபோன பொலிசார்..!

Report
42Shares

இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பதிவிட்ட இளைஞரை காரில் கடத்தி சென்று பாலியல் செய்த கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 22 வயது நபர் ஒருவர் கடந்த நாட்களுக்கு முன் மும்பையில் உள்ள ஒரு பிரபல ஓட்டலுக்கு சென்று செல்ஃபி புகைப்படம் எடுத்துள்ளார். அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அந்த புகைப்படம் லைக்குகள் குவிய, அவரை பின் தொடரும் 4 வாலிபர்கள், அந்த ஓட்டலின் விவரத்தை அறிந்து அந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

உடனே அவரைக்கண்ட அந்த இளைஞர்கள், 4 பேரும் தீவிர ரசிகர்கள் என பேச்சுக்கொடுத்துள்ளனர். அதன் பின் தங்களுடன் பைக்கில் ரைடு வருமாறு அழைத்துள்ளனர்.

அவர்களின் பேச்சை நம்பி அவரும் செல்ல, சிறுது தூரம் சென்றதும் காரில் செல்லலாம் என வற்புறுத்தியுள்ளனர். காரில் சென்றவுடன் 3 மணிநேரமாக அவரை 4 பேரும் பாலியல் தொலை கொடுத்துள்ளனர்.

பின்பு, மறுநாள் காலை, சாலையின் ஓரமாக வாலிபரை இறக்கிவிட்டு 4 பேரும் தப்பி சென்று விட்டனர். மயக்க நிலையில் இருந்த மீண்ட வாலிபர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அடுத்த சில மணி நேரத்தில் 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது இயற்கைக்கு மாறான உறவு வைத்ததாக 377 பிரிவின் கீழ் கைது செய்து செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சிறையில் அடைத்தனர். அதில் ஒருவர் 18 வயதுக்குட்பட்டவர் என்பதால் அவரை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

நாட்டில் பெண்கள், குழந்தைகள் என எதிராக பாலியல் வன்கொடுமை நடக்கும் நிலையில், வாலிபர் ஒருவருக்கு இப்படி நடந்த சம்பவம் அதிர்ச்சியையே ஏற்படுத்தியிருக்கிறது.

loading...