கைலாசா எங்கிருக்கிறது தெரியுமா? மீண்டும் வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியளிக்கும் நித்யானந்தா..!

Report
714Shares

கடந்த சில வாரங்களுக்கு மேல் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருபவர் நித்யானந்தா. இவரை பிடிக்க கர்நாடக மாநில பொலிசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் அவர் “கைலாசா” என்ற தீவை விலைக்கு வாங்கி அங்கு குடியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையில் நித்யானந்தாவை 12ம் திகதிக்குள் எங்கே இருக்கிறார் என்று கண்டறிய வேண்டும் என கர்நாடக பொலிசாருக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் நித்யானந்தா புதியதாக வெளியிட்ட வீடியோவில், ”உண்மையான கைலாசத்தை நாம் தான் உருவாக்குகிறோம். எனது உடலை பயன்படுத்தி பரமசிவன் இவ்வுலகில் கைலாசத்தை உருவாக்குகிறார்.

இ-ஸ்ரீகைலாசா திட்டத்தை தொடங்கியுள்ளோம். இது ஒரு நாட்டின் குடியுரிமை அல்ல. எல்லைகள் அற்ற ஆன்மிக பெருவெளி. கைலாசாவிற்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

கைலாசா மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நீங்கள் உங்கள் செல்லப்பிராணிகளையும் கைலாசாவில் இணைக்கலாம். அவற்றுக்கும் சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன.

ஒவ்வொரு முறை நம் மீது பழி சுமத்தப்படும் போதும் நாம் நேர்மையானவர்கள் என்பதை நிரூபித்து காட்டுகிறோம்.

அதன் மூலம் நமது புகழ் உயருகிறது. மேலும் பலர் நம் மீது நம்பிக்கை வைக்கிறார்கள். ஒருவரை தாக்குபவர்கள் சரித்திரம் படைக்க மாட்டார்கள்.

தாக்குதலை எதிர் கொள்பவர்தான் வரலாறு படைப்பார்கள். என் மீது குற்றம் சாட்டுபவர்கள் முட்டாள்கள். நானே மனிதத்தின் எதிர்காலம்,'' என்று பேசியிருக்கிறார்.

loading...