ஒரே பைக்கில் பயணித்த 3 பேர்... நொடியில் மாயமாகிய அதிர்ச்சிக் காட்சி!

Report
164Shares

மதுபோதையில் மூன்று இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் பயணித்து திடீரென நிலைத்தடுமாறி விபத்து ஏற்பட்டு காணாமல் சென்ற காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம், ஹரியானா மாநிலத்தின் ஃபரிதாபாத் பகுதியில் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் நடைபெற்றிருப்பதாக கூறப்படுகின்றது. இந்த சாலையில் வாகனங்கள் அனைத்தும் அதிவேகமாக செல்ல அனுமதிக்கப்பட்டிருப்பதால் இருசக்கர வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதனையும் மீறி ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று இளைஞர்கள் போதையில் சென்று பாரிய விபத்தினை சந்தித்துள்ளனர். இதில் பின்னே இருந்த இளைஞர் ஹெல்மெட் போடாததால் அதிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மற்ற இரண்டு பேரும் சிறு காயத்துடன் தப்பியுள்ளனர்.

இவர்கள் மூன்று பேரையும் மீட்டு சக வாகன ஓட்டிகள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

5771 total views