ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு தாலிக்கட்டிய வாலிபர்.. வெளியான பரபரப்பு தகவல்..!

Report
153Shares

வேலூரில் ஓடும் பேருந்தில் இளம்பெண்ணுக்கு இளைஞர் ஒருவர் தாலிகட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த பகுதியை சேர்ந்தவர் ஜெகன்(25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை கல்லூரி படிக்கும் போதே ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அந்த பெண்ணுக்கு, திருமணம் நிச்சயக்கபட்டுள்ளது. இதனை அறிந்த ஜெகன் அந்த பெண்ணிடம் காதலை தெரிவித்துள்ளார். ஆனால் அந்த பெண் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, காலை வாணியம்பாடி செல்லும் அரசு பேருந்தில் அந்த பயணித்துள்ளார். அப்போது, ஜெகன் திடீரென தாலியை எடுத்து அந்த பெண்ணிற்கு கட்டியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த இளம்பெண் அலறியடித்துக்கொண்டு கூச்சலிட்டார். இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த சக பயணிகள் ஜெகனை அடித்து உதைத்தனர்.

பின்னர், அருகில் உள்ள காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்துள்ளனர். அந்த பெண் அளித்தப்புகாரில் விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

loading...