பிரபல நடிகரின் தங்கை புற்றுநோயால் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்

Report
498Shares

ரஜினியின் பேட்ட படத்தில் சிங்காரம் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரள வைத்து பிரபல நடிகரான நவாசுதீன் சித்திக்கின் தங்கை புற்றுநோயால் மரணமடைந்துள்ளார்.

பாலிவுட்டில் முன்னனி நடிகராக வலம் வரும் சித்திக உத்திரபிரதேசத்தில் புதானா என்ற கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் தான் நவாசுதீன் சித்திக். இவருடன் பிறந்தவர்கள் 9 பேருடன் கஷ்டப்பட்ட நவாசுதீன் ஆரம்பத்தில் நாடகத்தில் நடித்து தற்போது பாலிவுட்டில் முன்னனி நடிகராக உயர்ந்துள்ளார்.

இந்நிலையில் நவாசுதீன் சகோதரி ஷியாமா(26) மார்பக புற்றுநோய் காரணமாக மரணமடைந்துள்ளார். ஷியாமாவின் 18 வயதிலிருந்து ஏற்பட்ட இந்த புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்துள்ளார். தற்போது சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

தங்கையின் மரண செய்தியைக் கேட்ட நவாசுதீன் தற்போது அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்புகின்றார். நவாசுதீன் தங்கையின் மரணத்தினை அறிந்த பாலிவுட் நடிகர் நடிகைகள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

15465 total views