வடிவேலு ஸ்டைலில் வெங்காயத்தை திருடிய நபர்! சிசிடிவி காட்சியால் சிக்கிய சுவாரசியம்

Report
217Shares

மதுரையில் வடிவேலு பட பாணியில் வெங்காயம் உட்பட மளிகை பொருட்களை திருடிய நபரை பொலிசார் கைது செய்தனர்.

மதுரை கோமதிபுரத்தில் அமைந்திருக்கும் மளிகைகடைக்கு வந்த 50 வயது மதிக்கத்தக்க நபர், கடையில் இருக்கும் நபரிடம் ”உங்க முதலாளியிடம் ரூ.1500 முன்பணம் கொடுத்தேன், இப்போது அரிசி வேண்டாம், நான் கொடுத்த பணத்தை திருப்பி தாருங்கள்” என கேட்டுள்ளார்.

இவர் பேச்சை நம்பி அந்த ஊழியரும் பணத்தை கொடுக்கவே, அதை வாங்கி கொண்டு முதியவரும் சென்றுள்ளார்.

பின்னர் கடைக்கு வந்த முதலாளியிடம் நடந்த சம்பவத்தை விவரிக்க, யார் அவர் என்று தெரிந்து கொள்வதற்காக சிசிடிவி காட்சிகளை பார்த்துள்ளனர்.

அப்போது தான் விசயமே புரிந்துள்ளது, தினமும் கடைக்கு வந்த அந்த முதியவர் ஊழியரின் கவனத்தை திசை திருப்பி வெங்காயம் உட்பட மளிகை பொருட்களை திருடுவது தெரியவந்தது.

இவரை கையும் களவுமாக பிடிக்க காத்திருந்த நேரத்தில், நேற்று மாலை 6 மணி அளவில் மீண்டும் கடைக்கு வந்தவரை பிடித்தனர்.

விசாரணை நடத்தியதில் அவர் மதுரை கோமதிபுரம் கொன்றை வீதியைச்சேர்ந்த அப்துல் ரகுமான் (வயது 51)என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அவரை கைது செய்த அண்ணாநகர் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

loading...