5 மாத கர்ப்பிணி பெண் பரிதாப மரணம்... திருமணமான 7 மாதத்தில் நிகழ்ந்த சோகம்

Report
77Shares

இந்தியாவில் விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஆனந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் பாபு(28). வேன் சாரதியாக வேலை பார்த்து வரும் இவருக்கும், தொட்டிமேடு பகுதியைச் சேர்ந்த சூர்யா(20) என்ற பெண்ணிற்கு கடந்த 7 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

ஐந்து மாத கர்ப்பிணியாக சூர்யாவிற்கும், கணவர் கணேஷ் பாபுவிற்கும் அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. சம்பவ தினத்தன்றும் இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டு கணேஷ் சூர்யாவை அடித்துள்ளார்.

இதனால் அழுதுகொண்டிருந்த சூர்யா திடீரென எழுந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடனே சூர்யாவின் தாய் வீட்டிற்கு போன் செய்து விடயத்தினைக் கூறியுள்ளார் கணேஷ் பாபு.

அவர்கள் விரைந்து வந்து, தூக்கில் தொங்கிய மகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சூர்யா ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

பெண் வீட்டினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கணேஷ் பாபு மற்றும் அவரது தாய் கைது செய்யப்பட்டு பொலிசாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

loading...