குற்றவாளிகள் கொடுத்த வாக்குமூலத்தில் பொலிசாருக்கு ஏற்பட்ட கோபம்... என்கவுண்டருக்கு இதுதான் காரணமாம்?

Report
863Shares

ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக்கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 4 பேரை நேற்று அதிகாலை 3.30 மணிக்கு பொலிசார் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்து கடந்த 27ம் திகதி ஹைதராபாத்தின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே கொல்லப்பட்டார். இந்த வழக்கில் குற்றவாளிகள் முகமது ஆரிப்(26), ஜொள்ளு சிவா(20), ஜொள்ளு நவீன்(20), சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு(20) என நான்கு குற்றவாளிகளை கைது செய்தனர்.

சைபராபாத் கமிஷ்னர் சஜ்னார் கொடுத்த உத்தரவின் பெயரில் தனிப்படை பொலிசார் தீவிர விசாரணை நடத்திய பின்பு நேற்று அதிகாலை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விளக்கம் அளிக்கக் கூறியுள்ளனர்.

குற்றவாளிகளுடன் 6 பொலிசார் சென்ற நிலையில், குற்றத்தினை விளக்கிய பின்பு 4 பேரும் புதருக்குள் குதித்து தப்பி ஓட முயற்சித்தும், இதில் ஒருவர் நெடுஞ்சாலையில் சென்று தப்பி ஓட முயற்சித்துள்ளனர். உடனே சுதாரித்துக்கொண்ட பொலிசார் நான்கு பேரையும் சுட்டு கொலை செய்யப்பட்டனர் என்று கூறிய நிலையில் தற்போது குற்றவாளிகள் அளித்த வாக்குமூலமே பொலிசாரை கோபத்தில் ஆழ்த்தியது என்றும் இவ்வாறு என்கவுண்டரில் கொலை செய்ததற்குக் காரணம் என்று கூறப்பட்டு வருகின்றது.

ஆம் குற்றவாளிகளிடம் 8 நாட்கள் நடந்த விசாரணையில் அவர்கள் அளித்த வாக்குமூலம் என்னவென்றால், குறித்த பெண் மருத்துவர் தனது வாகனத்தினை டொல் கேட் அருகே நிறுத்திய 20 நிமிடத்திற்குள் பஞ்சர் செய்துள்ளனர். பின்பு காத்திருந்த குற்றவாளிகள் 9.25க்கு பெண் வந்த தருணத்தில் அவருக்கு உதவி செய்வது போன்று ஒருவன் வாகனத்தினை வாங்கிச் சென்றுள்ளான்.

அத்தருணத்தில் மற்ற 3 பேரும் பெண்ணைத் தாக்கி புதருக்கு சென்று கொண்டு சென்ற பின்பு, முதலில் போனை சுவிட் ஆப் செய்துள்ளனர். குறித்த பெண் மருத்துவர் பாலியல் தாக்குதலின் போது கத்திக்கொண்டே இருந்ததால் அவரின் வாயில் மதுவை ஊற்றிவிட்டு பின்பு தலையை கல்லால் அடித்துள்ளனர்.

கடைசியில் கொலை செய்துவிட்டு அங்கிருந்து 27 கிமீ அவரின் உடலை லாரியில் வைத்து கொண்டு சென்றுள்ளனர். 27 கிமீ தூரத்தில் இரண்டு செக் போஸ்ட்டுகளை அவர்கள் கடந்து சென்றுள்ளனர். ஆனால் அவர்களை போலீஸ் அப்போது சந்தேகப்படவே இல்லை . பின் அதிகாலை 2.30 மணிக்கு அந்த பெண்ணின் உடலை பாலத்திற்கு கீழ் வைத்து எரித்துள்ளனர் என்பதை வாக்குமூலத்தில் தெரிந்துகொண்டனர்.

பின்பு ஒரு பெண்ணை வாயில் மதுவை ஊற்றி இந்த அளவிற்கு கொலை செய்துள்ள கோபத்தினால் குறித்த என்கவுண்டர் பிளானை போட்டுள்ளனர் என்றும் இரண்டு குற்றவாளிகளின் கைகள் விசாரணையின் போது உடைக்கப்பட்டது என்றும் கூறப்பட்டு வருகின்றது.

இவ்வாறான தகவல் ஒருபுறம் வெளிவந்தாலும், குற்றவாளியில் ஒருவன் பொலிசார் ஒருவரை தாக்கிவிட்டு அவரது துப்பாக்கியை பறித்து பொலிசாரையே மிரட்டியதாகவும், மற்ற மூன்று பேரும் தப்பி ஓடிய பின்பு துப்பாக்கியை வானத்தை நோக்கி சுட்டதாகவும், உடன் இருந்த காவலர்களுக்கு காயம் ஏற்படுத்திவிட்டு தப்பிக்கையிலே இவ்வாறு என்கவுண்டர் நடந்தேறியது என்று பொலிசார் கூறி வருகின்றனர்.

loading...