என்னையும் கொன்னுடுங்க!.. இனி நான் எப்படி வாழ்வேன்? கதறும் குற்றவாளியின் கர்ப்பிணி மனைவி

Report
156Shares

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்து கொன்ற குற்றவாளிகளை என்கவுண்டரில் சுட்டுக் கொன்ற பொலிசாருக்கு குஜராத் தொழிலதிபர் ஒருவர் ஒரு லட்ச ரூபாயை ரொக்கபரிசு அறிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில் ஆரிப், சிவா, நவீன் மற்றும் சென்னகெஷ்வலு ஆகியோர் கைது செய்யப்பட்டனர், இவர்களுக்கு கடும் தண்டனை வழங்க கோரி பெரும்பாலான மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று சம்பவம் நடந்த இடத்திற்கு குற்றவாளிகளை அழைத்து சென்ற பொலிசார், நடித்துக்காட்ட சொல்லியுள்ளனர்.

அப்போது பொலிசை தாக்கிவிட்டு குற்றவாளிகள் தப்ப முயன்றதால், நால்வரையும் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

பொலிசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பலரும் ஆதரவு தெரிவித்தாலும், பெண்கள் மீதான வன்முறைக்கு இதுதான் தீர்வா என கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.

இந்நிலையில் என்கவுண்டர் நடத்திய பொலிசாருக்கு குஜராத் தொழிலதிபர் ஒருவர் ஒரு லட்ச ரூபாய் ரொக்கபரிசை அறிவித்துள்ளார்.

உறவினர்கள் கதறல்

கொல்லப்பட்ட நால்வரில் சென்னகேசவுலு என்பவர் மட்டுமே திருமணம் ஆனவர். அவரது மனைவி ரேணுகா (17) கர்ப்பிணி யாக உள்ளார்.

அவர் கூறுகையில், விசாரணைக்கு அழைத்து சென்ற பொலிசார் இரக்கமின்றி கொன்றுவிட்டார்கள்.

என்னையும் அதே இடத்தில் சுட்டுக்கொல்லட்டும், அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் போடட்டும்.

என்னை போன்று அந்த மருத்துவரும் பெண் தானே, திருமணம் முடிந்து ஒரு ஆண்டு கூட ஆகவில்லை, அவர் இல்லாமல் நான் எப்படி வாழ முடியும் என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று தன் மகனை வேண்டுமென்றே பொலிசார் சுட்டுக் கொன்றதாக நவீனின் தந்தையும், மற்ற பாலியல் குற்றவாளிகளையும் சுட்டுக் கொல்வார்களா என சிவாவின் தந்தையும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

loading...