திருமண நிகழ்ச்சியில் நடனமாடியதை நிறுத்திய பெண்.. மர்ம நபர்கள் செய்த செயல்.. பதறவைக்கும் வீடியோ..!

Report
180Shares

திருமணத்தின் நிகழ்ச்சியின் போது நடனமாடுவதை நிறுதியதற்காக இளம்பெண்ணை துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில், நடந்த திருமண நிகழ்ச்சியில் இளம்பெண் ஒருவர் குழுவுடன் சேர்ந்து நடனமாடிகொண்டிருந்துள்ளார்.

அப்போது ஒரு சில நிமிடங்கள் அந்த பெண் நடனமாடுவதை நிறுத்த, கீழே அமர்ந்திருந்த சில நபர்கள் மதுபோதையுடன் ஆட சொல்லி வற்புறுத்தியுள்ளார். ஆடவில்லை என்றால் சுட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார். அருகிலிருந்த மற்றொரு நபர் சுட சொல்லி கத்த, அடுத்த நொடியே அந்த மர்ம நபரும் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இதையடுத்து சுடப்பட்டதில் முகத்தில் காயமடைந்த அந்தப் பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் அந்த மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இச்சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8456 total views