வீட்டை சுத்தம் செய்த பெண்ணிற்கு ஏற்பட்ட பரிதாபநிலை... இறுதியில் உயிரிழந்த சோகம்

Report
217Shares

சென்னையில் மழையினால் சகதியாக இருந்த தனது வீட்டினை சுத்தம் செய்த பெண் விஷப்பாம்பு தீண்டியதால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சென்னை கேகே நகரை சேர்ந்த தம்பதி பழனி, சுமித்ரா. பழனி சினிமா தயாரிப்பு ஒன்றில் கார்பெண்டராக வேலை பார்த்து வருகின்றார்.

கடந்த வாரம் சென்னை முழுவதும் கனமழை பெய்ததால் சுமித்ராவின் வீடு முழுவதும் தண்ணீர் புகுந்ததில் சகதியாக காணப்பட்டுள்ளது. இதனால் வீட்டினை சுத்தம் செய்ய ஆரம்பித்துள்ளார் சுமித்ரா.

அத்தருணத்தில் பாத்ரூம் அருகில் இருந்த ஷுவை எடுத்துள்ளார். அதற்குள் 2 அடி நீளத்தில் பதுங்கியிருந்த கட்டுவிரியன் பாம்பு சுமித்ராவைக் கடித்துள்ளார்.

வலியால் அலறிய சுமித்ராவை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று தீவிர சிகிச்சை அளித்து வந்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனிக்காத நிலையில் சுமித்ரா பரிதாபமாக இறந்துள்ளார்.

சுமித்ராவுக்கு பாம்பு கடித்த உடனே உடம்பெல்லாம் விஷம் ஏறிவிட்டதால், மொத்த நரம்பு மண்டலத்திற்கும் விஷம் ஏறியுள்ளது. இதனாலே சிகிச்சை பலனளிக்கவில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

7330 total views